என் நெஞ்சிலாடும் களபமே-24

என் நெஞ்சிலாடும் களபமே-24

களபம்-24

மித்ரா அன்று காலையில் மோகன் எழுந்து தன்னை ஹாலிற்குப் போகச்சொல்லிடுவனோ? என்று பயந்து அவன் சொல்லுவதற்கு முன்பே போயிடணும்னு வெளியே வந்தவள் படபடவென்றுக் குளித்துமுடித்து வந்தவள் சமையலையும் முடித்துவிட்டாள்.

அவன் மத்தியானம் ஆபிஸ் கேண்டினிலே சாப்பிட்டுவிடுவான் என்பதால் காலையும் இரவும் மட்டும்தான் அவனுக்காக சமைப்பாள்.

காலையில் சமைத்ததையே மத்தியானமும் அவள் சாப்பிட்டு விடுவாள்.அதனால் பெரிதாக மத்தியானம் குழம்பு பொரியல் என்று எதுவும் செய்யமாட்டாள்.

ஏற்கனவே ஒருவாரத்தில் என்னென்ன வேண்டும் என்று லிஸ்ட்டுப்போட்டு அவனின் பாக்கெட்டில் வைத்து விட்டிருந்தாள். அதுபோல கிரைண்டர் முதற்கொண்டு எல்லாம் வாங்கிப்போட்டிருந்தான்.

இப்போது தோசையும் சட்னியும் வைத்துவிட்டு படபடவென்று இன்டர்வீயூவிற்கு தயாராகி நின்றிருக்க மோகன் எழுந்து வந்தான்.

அவனுக்கு உடனே டீ போட்டு எடுத்து வந்தவள் வைத்துவிட்டு போக அவளது கையைப்பிடித்தவன் ”ஏன் கையில டீயைத் தந்தால் குறைஞ்சுப் போயிடுவியா என்ன? டீயை எடுத்து என் கையில் தா”என்று ஆர்டர் போட்டான்.

மித்ராவுக்கு அந்த டீயை எடுத்து நானே குடிச்சிட்டுப் போகட்டுமா? என்றுதான் எண்ணம் வந்தது. அதை வேண்டாம் என்று தலையாட்டித் தடுத்துவிட்டு அந்த டீயை எடுத்து அவனது கைக்கு நீட்டினாள்.

அவனோ கொஞ்சநேரம் அவளையே பார்த்திருந்துவிட்டு வாங்காதிருந்தான். அவள் எரிச்சலில் டீயைத் திரும்பக் கொண்டுப் போகணும்னு நினைச்சு கால்களை எடுத்துத் திரும்பனாள்.உடனே டீயைத் தா என்று கேட்டான்.

“இவங்களுக்கு என்னைப் பார்த்தால் எப்படித்தெரியுது?”என்று கோபம்வந்தாலும் எரிச்சலில் கால்கடுக்க நின்றிருந்தாள்.

“ஏன் என்னை எழுப்பாம நீ மட்டும் தனியாகப்போய் குளிச்ச,என்னை எழுப்பியிருந்தால் நானும் வந்து சேர்ந்துக் குளிச்சிருப்பனே” என்றதும் அதிர்ந்தவள் இது சரிப்படாது.இங்கிருந்து எஸ்கேப்பாகிடு மித்ரா என்று குடுகுடுவென்று ஓடிவிட்டாள்.

அவளையே பார்த்திருந்தவன் ஒன்றுமே சொல்லாது சென்று குளித்துவிட்டு வந்தவன் ஆபிஸிற்குக் கிளம்பி வந்து சாப்பிட உட்கார்ந்தான்.

அங்கே ஏற்கனவே வேகமாக சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்த மித்ராவைப் பார்த்தான்.

ஏதும் சொல்லிடுவானோ என்று அவனைப் பார்த்து மிரண்டாள். அடிக்கடி அவனது மூடு எப்படி மாறும்னு தெரியாது திட்டிவிடுவான்தானே! அதேபோல் இப்போதும் அவனுக்கு முன்னாடியே சாப்பிட்டதுக்க் ஏதும் சொல்லிடுவானோ என்று நினைத்தவள் “சாரி எனக்கு இன்டர்வீயூ இருக்குது.அதுதான் உங்களுக்கு முன்னாடியே சாப்ட்டுட்டேன்”என்று சொன்னவளுக்கு பசியில் சாப்பிடதுக்கெல்லாம் காரணப் பதில் சொல்லவேண்டியது வரும்னு கனவுலக்கூட இப்படியான வாழ்க்கையை வரும்னு நினைச்சதில்லையே!” என்று கண்களில் நீர் முட்டிக்கொண்டு வரவும் அதை புறங்கையால் துடைத்துவிட்டு நின்றாள்.

அவளது செய்கையைப் பார்த்தவன் சாப்பிடாது தட்டை கோபத்தில் தூக்கியெறிந்துவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

பச்ச் அன்னைக்காவது வாயைத்திறந்து எனக்கு முன்னாடியே கொட்டிக்கிட்டியேன்னு திட்டினான்.இன்னைக்கு அதுவும் சொல்லல தட்டு பறந்துட்டு. அதுசரி அவன் தட்டு அவன் வீசுறான்.பட் துடைக்கிறதும் தூக்குறதும் கழுவுறதும் நான்தானே!என்று நொந்துப்போனவள் எல்லாத்தையும் எடுத்து வைத்துவிட்டு பேக்கை போட்டவள் அவனது பர்ஸைத் திறந்துக் காசை எடுக்கவும் வந்துவிட்டான்.

“இன்டர்வீய்வ் போறேன். எப்படியும் வேலைக்கிடச்சிடும். அப்புறம் சாப்பாட்டுக்கும் உங்கக்கிட்ட வாங்கினதுக்குமான பணத்தைத் தந்திடுறேன்” என்று பாவமாகச் சொன்னாள்.

அதைக்கேட்டதும் அப்படியே இழுத்து வைச்சு நாலு அறைவிடணும்னு அவனுக்குத் தோணுச்சு. அதைப் பற்களைக் கடித்துக் காண்பித்தவன் இதற்குமேல் இவளிடம் பேசினால் கோபத்தில் கைநீட்டிடுவோம் என்று கதவை அறைந்து சாத்தியவன் வெளியே போய்விட்டான்.

அவளுக்குமே அவனது கோபம் புரிந்ததுதான்.பிடிக்காதவளை நம்ம தலையில் கட்டிவைச்சுட்டாங்கன்னு வாழவும் முடியாமல் தள்ளவும் முடியாமல் மனதில் எல்லாம் தேக்கிவைச்சு அந்தக்கோபத்தை காண்பிக்கிறாங்க.கடவுளே எனக்கு ஏதாவது நல்லவழி காண்பிங்க. எனக்குமே இப்படி இருந்தால் கூடிய சீக்கிரம் பைத்தியம் பிடிச்சிடும் என்று தலையைப் பிடித்துக்கொண்டு நின்றவள் வேறவழியின்றி கதவைப் பூட்டிவிட்டு கீழே இறங்கினாள்.

அவள் பில்டிங்கினை விட்டு வெளியே வரவும் அவள் முன்பு கார் வந்து நின்றது.ஐயோ என்று பயந்து ஒரு அடி பின்வாங்கியவள் அப்படியே நின்றுவிட்டாள்.

அதில் மோகன் உட்கார்ந்திருந்தான். அவளுக்காக டோரைத் திறந்துவிட்டவன் ”ஏறு”என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டான்.

அவள் ஏறியதும் “எந்தக் கம்பெனியில் இன்டர்வீய்வ்?”

“ஜெகன்னாத் கன்ட்ரக்க்ஷன் அண்ட் பில்டர்ஸ்”

“என்ன?”என்று கேட்டவன் காரை சடன்ப்ரேக் போட்டு நிறுத்தியிருந்தான். அதில் முன்னாடி போய் வந்தவளுக்கு நல்லவேளை அடியெதுவும் படவில்லை. காரில் ஏறியதும் சீல்ட் பெல்ட் போட்டிருந்ததால் தப்பித்தாள்.

“என்ன கம்பெனி சொன்ன திரும்ப சொல்லு”

“ஜெகன்னாத் கம்பெனி…ஜெகன்னாத் ஜெகன்னாத்…ஜெ..க…ன்”

“போதும் நிறுத்து நல்லக் கேட்டுச்சு”

‘ம்க்கும் இந்த ஆக்கங்கெட்ட கெத்துக்கு ஒன்னும் குறைச்சலில்ல” என்று முணுமுணுத்தாள். அது அவனுக்கு கேட்டிருக்கும் ஆனால் கேட்காத மாதிரிமே உட்கார்ந்திருந்தான்.

“ எனக்கு பத்து மணிக்குத்தான் இன்டர்வீயூ.நீங்க என்னைக் கொண்டு விட்டுட்டு உங்க ஆபிஸுக்குப் போங்க.ரொம்பத் தேங்கஸ் கூட்டிட்டுப் போறதுக்கு”

அவள் தேங்க்ஸென்று சொன்னதும் ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தவன் “தேங்கஸ்லாம் சொன்னா எனக்கு எந்தப்பலனும் இல்லை.எனக்குத் தேவையான ஏதாவது கீழிறங்கும்போது தந்துட்டுப்போ”

“சரி உங்கப்பர்ஸ்ல இருந்துத் தான் காசு எடுத்து வாங்கித் தரப்போறேன். எதுன்னாலும் கேளுங்க”

“எதுன்னாலும்?”

“ஆமா”

அத்தோடு இருவருக்கும் இடையேயான் பேச்சுக்கள் முடிந்ததுபோன்றிருக்கவும் எப்.எம்மினை உயிர்பித்தான்.

அதில் இந்தி பாடல்கள் ஒலிக்கவும் அவளுக்கு எங்கே புரியப்போகுது என்று அணைத்துவிட்டான்.

“நல்லாதானே இருந்துச்சு வைக்கலாமே!”

“உனக்குப் புரியாத பாஷையில் இருந்தா நல்லாயிருக்குன்னு சொல்லுவியா என்ன? இரு டிரைவ்ல எனக்குப்பிடிச்சதைப் போடுறேன்”என்றவன் வேற போட்டுவிட்டான்.

இளையராஜாவின் சோகக்கீதங்கள்.அதைக்கேட்டவள் படக்கென்று ஆப் பண்ணிட்டாள்.

“ஏன் எனக்குப் பிடிச்சுது நீ கேட்கமாட்டியா?” என்று அதற்கும் சண்டைக்கு வந்தான்.

“நான் இன்டர்வீயூல செலக்ட் ஆகணும்னு பாஸிட்டிவ் வைப்போட போறேன்.இப்படி அழுதுவடியிற பாட்டையாக் கேட்பாங்க. உங்ககாதல் தோல்வி பாட்டெல்லாம் நான் கேட்மாட்டேன்” என்றவள் இப்போது வெளியே வேடிக்கைப் பார்த்தாள்.

அரைமணி நேரப்பயணம் ஏதோ முன்னபின்ன தெரியாத ஆளுக்கூட அடுத்தடுத்த பஸ்ல போய் இறங்குற பீலோடு போய் இறங்கினாள்.

“ஓகே ரொம்ப நன்றி அத்தான்.அப்புறம் போகும்போது எப்படிப்போகணும்னு மட்டும் சொல்லித்தாங்க.சாவி என்கிட்டயே இருக்கு.வழிமட்டும்தான் தெரியாது”என்று சொல்லிவிட்டு இறங்குவதற்காகக் கதவைத் திறந்தவளின் கையைப்பிடித்து வைத்திருந்தான்.

“என்னாச்சு?”

“உன்னைச் சொகுசா கார்ல கொண்டுவிட்டதுக்கு 

இறங்கும்போது எனக்குத் தேவையானதைத் தர்றேன்னு சொன்னல தந்துட்டுப் போ”

“சரி என்ன வேணும்?”

“நீ தர்றியா இல்லை நானே தரவா?”

“புரியலத்தான்.ப்ளீஸ்த்தான் எனக்கு இன்டர்வீயுவுக்குப் போகணும்.என்னனு சொல்லுங்க”

“அதுவா இங்க பக்கத்துல வா உனக்கு என்னதுன்னு புரியவைக்கிறேன்”

ப்ச்ச் என்று கொஞ்சம் அவனருகில் நகர்ந்து உட்கார்ந்தவளின் கைகளைப் பிடித்து சீட்டின் மேல வைத்தவன் அவளது உதட்டில் முத்தம் வைத்தான்.

ஐயோ என்று சத்தமாகச் சொன்னவள் என்ன பண்றீங்கத்தான் விடுங்க என்று சொல்ல,அவனோ அடுத்த முத்தத்தையும் அவளது இதழிலே கொடுத்தான்.

அவளால் கைகால்களை அசைக்கமுடியாது அப்படியே அவனது பிடிக்குள் இருந்தாள்.

இதுதான் என் தேவையா இருந்துச்சு. அதுதான் கேட்டேன். நீ தரலை நானே எடுத்துக்கிறேன் என்று மீண்டும் முத்தம் வைத்து விடுவித்தவன் ஆல் தி பெஸ்ட் என்றவன் டோரைத் திறந்துவிட்டான்.

அவளும் உதட்டைத் துடைத்துவிட்டு இறங்கியவள் உள்ளே சென்று திரும்பிப் பார்த்து உதட்டை வளைத்து பழிப்புக்காட்டிவிட்டுப் போனாள்.

ம்ம்ம் என்று பெருமூச்சு விட்டவன் காரை எடுத்தான்.

மித்ரா உள்ளே சென்றவள் அங்கே ரிசப்ஷனிஸ்ட்டிடம் போய் இன்டர்வீயூவிற்கு வந்ததாகச் சொன்னாள்.

உடனே உட்காரச்சொல்லிவிட்டு அவள் வந்திருப்பதை உள்ளே தகவல் அனுப்பினாள்.

அங்கிருந்து அழைப்பு வரும்வரைக்கும் லாபியில் உட்காரவைக்கப்பட்டிருந்தாள். அவள் சுற்றிலும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவள் வெளிக்கதவைப் பார்க்க அங்கே மோகன் ஸ்டைலாக நடந்துவந்தான்.

ஐயோ அத்தான் எதுக்கு இங்க வர்றாங்க. எல்லோர் முன்னாடியும் முத்தம் கொடுத்திடுவாங்களோ என்று உதட்டைப் பொத்தி வைத்துவிட்டு அவனையே பார்த்திருந்தாள்.

கடவுளே கடவுளே என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே அவனைப் பார்த்திருந்தாள்.

அதற்குள்ளே அவன் நடந்துவரவுமா எல்லோரும் குட்மார்னிங் சொல்லி விஷ்பண்ண அவன் ஸ்டைலாகத் தலையசைத்துக்கொண்டே உள்ளே போனான்.

அவளை மோகன் கண்டுக் கொள்ளவேயில்லை!

“என்னங்கடா என் அத்தானுக்கு எல்லோரும் விஷ்பண்றாங்க. அப்போ அவரு இங்கதான் வேலைப் பார்க்கிறாரா? அடக்கடவுளே இது தெரியாம வேற அப்ளை பண்ணி இப்போ இங்கவரைக்கும் வந்துட்டனே. இதுல அவருக்கிட்டயே வேலை கிடைச்சதும் பணம் தர்றேன்னு பேசிட்டு வந்திருக்கேன். இவரு ஒரு வார்த்தைச் சொன்னா போதுமே வேலைக்கிடைக்காதே! ஏன் கடவுளே ஆப்பைத் தாலி ரூபத்துல கழுத்துக் கட்டிவிட்டு என்னை சுத்தல்ல விடுறீங்க என்று நொந்துப்போனாள்.

மோகன் அவளைக் கண்டுக்கொள்ளவேயில்லை. அதுவேற அவளுக்கு வருத்தமாக இருந்தது. நேத்துவரைக்கும்… என்று யோசித்தவள் நேத்து என்ன நேத்து இப்போ பத்து நிமிஷம் முன்னாடிவரைக்கும் தேவைன்னு முத்தம் வைச்சாங்க. இப்போ நான் யாருன்னு தெரியாத மாதிரியே போறாங்க என்று வேறு மனம் கலங்கியது.

இப்படியே எல்லாத்தையும் மனசுலபோட்டுக் குழப்பிக்கிட்டே இருக்காத மித்ரா என்று தன்னைத்தானே தேற்றியவள் தனக்கான அழைப்பு வரும்வரைக்கும் காத்திருந்தாள்.

அவள் ஒருவள் மட்டும்தான் வந்திருந்தாள் என்பதால் தனக்கான நேர்கணால் மட்டும்தான் போல எப்படியும் வேலைக் கிடைச்சிடும் என்னு நம்பிக்கையோடு இருந்தாள்.

ஒரு மணிநேரக் காத்திருப்புக்குப் அவளை உள்ளே அழைத்தார்கள். அவ்வளவு நேரமும் சும்மா உட்காராமல் பேப்பரை எடுத்து அதிலும் பென்சிலை வைத்துக் கிறுக்கிக்கொண்டுதான் இருந்தாள்.

அநாவசியமாக எந்தப் பார்வையும் எந்த நேரக்கடத்தலும் இல்லாது பொறுமையாக உட்கார்ந்திருந்தாள். அவளது காத்திருப்பிற்கான எந்த எரிச்சலையும் முகத்திலோ இல்லை உடல்மொழியிலோ அவன் காண்பிக்கவேயில்லை.

அவள் காத்திருக்கும்போதே அவளுக்குப் பிடிச்ச மாதிரியான டீயினை ப்யூன் வேறு கையில் கொண்டுக் குடுத்தான்.

அதை வாங்கியவள் ரசித்துக் குடித்துவிட்டு எழுந்துப்போய் டஸ்ட்பின்னில் போட்டுவந்தாள்.

‘பரவாயில்லை இன்டர்வீய்வ் வந்தவளுக்கும் அழகாக டீ குடுத்து வரேவற்கிறாங்களே அதுவே பெரிய விசயம்தான்”என்று நினைத்தாள்.

அதன்பின் உள்ளே சென்றவள் எல்லாம் முடிந்து அரைமணி நேரத்தில் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரோடு வெளியே வந்தாள்.

அவள் நினைத்திராத சம்பளம்,வேலை என்று கையில் கிடைத்ததும் அப்பாவைத்தான் நினைத்தாள்?

கல்யாணம் முடியணும் நல்லவேலையில் சேரணும் சந்தோசமா வாழம்னுதானப்பா நினைச்சீங்க. எல்லாம் நடக்குது அந்த சந்தோசமா வாழ்றதுதான் நடக்காதுபோல என்று கண்ணீர் வந்தது. அதைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

அப்போது அவளுக்கு எதிரே பிரீத்தா வந்தாள்.அவளைப் பார்த்ததும் மனம் சட்டென்று சுருங்கிவிட்டது.

இவளை மறந்துட்டனே! அத்தான் இங்க வேலைப் பார்க்கிறாங்கன்னா இவளும் இங்கதானே இருப்பா என்று அப்படியே அவளைப் பார்த்தவாறே நின்றிருந்தாள்.

பிரீத்தா அவளைப் பார்க்கவில்லை உள்ளே சென்றுவிட்டாள். இப்போது கையில் இருக்கும் அப்பாயின்ட்மென்ட் லெட்டரையே பார்த்தவள் அதுக்கிழிச்சுப்போட நினைத்து கையில் இருந்து வேகமாக கசக்கப்போனாள்.

அதற்குள் மோகன் அருகில் வந்து நின்றான்.இன்டர்வீயூ முடிஞ்சுதா? அப்பாயின்ட்மென்ட் லெட்டர் கிடைச்சிடுச்சுப்போல வாழ்த்துகள். வா போகலாம்”என்று அவளது தோளில் பிரீத்தா பார்க்கும்படியாகக் கையைப்போட்டு அழைத்துச் சென்றான்.

மோகன் வெளியே வந்து மித்ராவிடம் பேசியதைப் பார்த்து யோசனையுடன் இது யாரு என்ற கேள்வியோடு பிரீத்தா அவர்களையே பார்த்திருந்தாள்.

அதில் தானாகவே பிரீத்தாவுக்கு இதுவரைக்கும் மோகன்மீது இருந்தக் கோபம் குறைந்து அவன்மீதான காதலின் தாக்கத்தால் பொசசிவ்னெஸ் வந்தது.

மித்ராவை பொறாமையோடு பார்த்திருந்தாள்!